புதுடில்லி: டில்லி போலீஸ் கமிஷனரை நீக்குவது குறித்த விவகாரத்தில், காங்கிரஸ், நழுவலாக பதில் அளித்துள்ளது.காங்., செய்தி தொடர்பாளர், ரேணுகா சவுத்ரி கூறியதாவது:"டில்லி மாணவி கற்பழிப்பு சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களை தடுக்க தவறியதற்காக, டில்லி போலீஸ் கமிஷனர், நீரஜ் குமாரை, பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தும், அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.,யுமான, சந்தீப் தீட்ஷித்தும், இதுகுறித்து கூறியது தொடர்பாக, கேள்வி கேட்கப்படுகிறது. இந்த விவகாரத்தை பொறுத்தவரை, காங்கிரஸ் வேறு; டில்லி முதல்வர் பதவி என்பது வேறு.இந்த விஷயத்தில், காங்கிரஸ் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக காத்திருக்கிறோம். விசாரணை முடிந்தபின், ஏதாவது ஒரு முடிவு எடுக்கப்படும். ஒரு விஷயம், பரபரப்பாக நடக்கும்போது, அதில் தொடர்புள்ளதாக கூறி, ஒருவரை பதவி நீக்கம் செய்வதால், எந்த தீர்வும் ஏற்படாது என்பது, என் கருத்து.இவ்வாறு, ரேணுகா சவுத்ரி கூறினார்.கமிஷனர் கடிதம்இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியிடம், மாஜிஸ்திரேட், வாக்குமூலம் பெற்றபோது, போலீஸ் உயரதிகாரிகள், அதில் குறுக்கிட்டதாக வெளியான தகவலை, டில்லி போலீஸ் கமிஷனர், நீரஜ் குமார் மறுத்துள்ளார். இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, விளக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.