செம்பட்டி: தமிழகத்தில், மின்வெட்டு பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில், இலவசங்கள் வழங்குவது மீண்டும் தொடர்கிறது.
தமிழகம் முழுவதும், ரேஷன் கார்டுகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்குவது, சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தினமும் 18 மணி நேரத்திற்கு அதிகமாக மின்தடை ஏற்படும் நிலையில், மின் சாதனங்களை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சி அல்லாத இதர கட்சிகள் ," இலவச மின்சாதன பொருட்களை பயன்படுத்த மின்சாரம் தர வேண்டாமா,' என கேள்வி எழுப்பினர். மின் சாதனங்களை வழங்க, டெண்டர் எடுத்த நிறுவனங்களும் மின்வெட்டு பிரச்னையால், உற்பத்தி பாதித்து, மின்சாதனங்கள் சப்ளையை நிறுத்திவிட்டன. தற்போது, சப்ளை மீண்டும் வர துவங்கியுள்ளது.
இதனால், குறிப்பிட்ட சில தாலுகாக்களில், குறைவான எண்ணிக்கையில் ரேஷன் கார்டு உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் பணி துவங்கியுள்ளன.டிசம்பர் இறுதியில் மின்வெட்டு படிப்படியாக குறைந்து, வரும் ஜூனில் முழுமையாக நீங்கும் என, அமைச்சர் விசுவநாதன் மேடை தோறும் உறுதியளித்து வருகிறார். இதனடிப்படையில், இலவசங்கள் வழங்கப்படுவதாக ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடந்த முறை திமுக அரசு இலவச டிவிக்களை கொடுத்தது ஒரு மிக பெரிய காரணம் மின்சார பயன்பாடு அதிகரித்ததற்கு....அதன் பலனை இரண்டு மணி நேர மின்வெட்டாக அனுபவித்தோம்....அதன் பிறகு அதிமுக அரசு பதவி ஏற்றது...மின்வெட்டு பதினாறு மணி நேரம் ஆனது............இதற்கான காரணங்கள் பல இருந்தாலும் என்னால் சில காரணங்களை சொல்ல முடியும்....திமுக அரசாங்கத்தில் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியினை இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்தனர்...இது தரமற்ற நிலக்கரி என்ற காரணத்தை காட்டி எந்தவித மாற்று ஏற்பாட்டினையும் செய்யாமல் அதிமுக அரசு ரத்து செய்து விட்டது...எனவே அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டது....மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்கள் கோர்டில் உள்ள வழக்கினால் நிலக்கரி தோண்டி எடுக்க முடியாத காரணத்தினாலும், கடுமையான மழையினாலும் ஜெயாவால் மத்திய அரசிடம் இருந்து மாற்று ஏற்பாடாக நிலக்கரி வாங்க முடியவில்லை.....பல காற்றாலை உற்பத்தி நிலையங்கள் மின்சாரத்தை தமிழக அரசிற்கு தயாராக இருந்தும் அவர்களுக்கு மின்சாரம் வழங்கியதற்கான நிலுவை தொகையினை தமிழக அரசு செலுத்தாத காரணத்தினாலும் அவர்கள் மின்சாரத்தை வழங்கவில்லை...அதே போன்று கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய ஆலைகள் தயாராக இருந்தும் அவர்களுக்கான நிதியினை வழங்காததால் அந்த ஆலைகளும் மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை....இவைகளை நிவர்த்தி செய்து இருந்தால் தமிழகம் ஓரளவு மின்வெட்டில் இருந்து தப்பித்து இருக்கும்.....இப்போதாவது முதல்வர் விழித்துக்கொண்டு இந்த மின்சாரத்தை அதி வேகத்தில் உறிஞ்ச கூடிய பொருட்களான மிக்சி, கிரைண்டர் போன்றவைகளை வழங்காமல் நிலுவையில் வைத்து மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றவுடன் வழங்க ஆவன செய்யலாம். இல்லை எனில் தமிழகம் அதே பதினாறு மணி நேர மின்வெட்டை தொடர்ந்து அனுபவிக்கும்.....தமிழகத்தில் தரிசு நிலங்கள் அதிகம். குறிப்பாக நாகபட்டினம் மாவட்டம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகம். அங்கே சூரிய ஒளி பூங்காக்களை நிறுவலாம். மத்திய அரசு தேவையான நிலக்கரியினை வழங்க முடியாத பட்சத்தில் தமிழக அரசு வேறு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யலாம். இதற்கு அனுமதி கிடைக்கவில்லை (அப்படி ஒன்றும் செய்தி இல்லை) என்றால் உடனடியாக கோர்ட்டின் உதவியை நாடலாம்...பயோ டீசல் மற்றும் கரும்பில் இருந்து கூட மின்சாரம் தயாரிக்கலாம்...காற்றாலை அதிபர்களுக்கான நிலுவை தொகையினை உடனடியாக வழங்கி அவர்களிடம் இருந்தும் மின்சாரத்தை பெறலாம்....இலவசத்தில் காட்டும் அக்கறையையும், இன்னும் ஒன்றரை வருடம் கழித்து வர கூடிய லோக்சபா தேர்தலுக்கு காட்ட கூடிய அக்கறையையும் முதல்வர் இதில் காட்டலாம்.........போர்கால அடிப்படையில் நிலுவையில் இருக்கும் மின் திட்டங்களையும் முடுக்கி விட்டால் தமிழகம் மின்மிகு மாநிலமாக ஜொலிக்கும். அப்புறம் நிதானமாக இந்த கிரைண்டர் மிக்சி மின்விசிறிகளை கொடுக்கலாமே........... நீண்ட கால திட்டமாக தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்தையும், செயற்கை ஏரிகளை உருவாக்கும் திட்டத்தையும் கொண்டு வந்தீர்கள் என்றால் அவைகளில் இருந்தும் கால நிலைக்கு ஏற்ப நீர் மின்சாரத்தை எடுக்க முடியுமே (தண்ணீர் பஞ்சமும் தீரும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்)...........
Power Projects expected by 2013
1. Mettur Stage 3 (600 MW)
2, North chennai Stage 2 (2 600 MW)
3. Vallur (JV with centre) - 3 500 MW
4. NLC - Tuticorin - (2 500) MW
5. 6 hydro projects (59 W)
With inclusion of central schemes (Kudankulam,Kalpaakam, Neyveli expansion) - 1300 W
With sugar mills included, the total state contribution above is 2042 MW, JV (central,state) - 1428 MW, and central - 1417.
All together TN expected to add 4887 MW by of 2013.
Other projects
1)North chennai Stage 3 (800 MW)
2)North chennai Stage 4 (2 800 MW)
3) Udangudi ( 2800 MW)
4) Kundah Pumped storage (500 MW)
4500 MW in future years
Future projects
1.Uppur thermal power project (2 800MW)
2. Udangudi expanson (1 800 MW)
3. Tuticorin stage 4 (800 MW)
4. Ennore - 660 MW
3860 MW in future years
Other than above Cheyyur ultra power project (state share is 1600 MW), Gas based projects, Private power. கணேஷ் - விகடன்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.