டோக்கியோ: ஜப்பானில் நேற்று, புதிய பிரதமராக ஷின்சோ அபேவும், அமைச்சர்கள் ஏழு பேரும், பதவி ஏற்றனர்.ஜப்பானில், 16ம் தேதி, பார்லிமென்ட் தேர்தல் நடந்தது.மொத்தமுள்ள, 480 இடங்களில், ஜனநாயக விடுதலை கட்சி, அமோக வெற்றி பெற்றது.இதையடுத்து, இக்கட்சியின் தலைவர், ஷின்சோ அபே, புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பார்லிமென்ட்டில், நேற்று, ஷின்சோ அபே, பிரதமராக பொறுப்பேற்றார். இவருடன், ஏழு அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர்.சீனாவுடன் காணப்படும், தீவு பிரச்னை, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம், சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தை நிலை நிறுத்துதல் உள்ளிட்ட முக்கிய வேலைகள், புதிய அரசுக்கு உள்ளது. இந்த கடமைகளை நிறைவேற்றுவதாக, ஷின்சோ அபே, உறுதியளித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.