இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், தலைமறைவாக இருந்த, சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன், அந்நாட்டு அதிகாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, தனது டைரியில் எழுதி வைத்துள்ளார்.சர்வதேச பயங்கரவாதி, ஒசாமா பின்லாடன், பாகிஸ்தானின், அபோதாபாத்தில், கடந்த ஆண்டு, மே மாதம், அமெரிக்க அதிரடி படையால், சுட்டு கொல்லப்பட்டார்.ஒசாமா ஒளிந்துள்ள இடத்தை அமெரிக்கா, தீவிரமாக தேடி வந்த நிலையில், அபோதாபாத்தில் தங்கியிருந்த ஒசாமா, தன் வீட்டில் இருப்பவர்களின் நடமாட்டம் வெளியுலகுக்கு தெரிய கூடாது, என்பதால், 14 அடி உயரத்துக்கு சுற்று சுவர் எழுப்ப முடிவு செய்தார்.இவ்வளவு உயரமான சுவரை அமைத்து, அதற்கு மேல் முள் கம்பி வேலிகளை அமைக்க, அப்பகுதி, வருவாய் துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, சுற்று சுவர் உயரத்தை அதிகரித்துள்ளார். இந்த தகவலை அவர், தன் டைரியில் எழுதி வைத்திருந்தது தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.ஒசாமா சுட்டு கொல்லப்பட்ட போது, அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து, 1.37 லட்சம் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.ஒசாமாவிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி, தற்போது, கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், "லஞ்சம் கொடுத்தவர் ஒசாமா என்பது தெரியாது' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.