கொடைக்கானல்: கொடைக்கானல் வாலிபர் கொலை தொடர்பாக மதுரை தனியார் பொறியியல் கல்லூரி மாணவரையும், கொலையானவர் மனைவியிடமும் நடந்த விசாரணையில் போலீசாருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. கொடைக்கானல் தெரசா நகரை சேர்ந்த பாண்டி மகன் அலெக்ஸ்பாண்டி,24. இவர் கடந்த டிச.15ம் தேதி நள்ளிரவு ரோட்டில் நடந்து செல்லும் போது மர்மநபர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இருவரிடம் விசாரணை: கொலை செய்யப்பட்ட அலெக்ஸ்பாண்டி மனைவி சரண்யா, மதுரை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் வீரபாண்டி,19,யுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.கொலைக்கு முன்னதாக இருவரும் ஊரைவிட்டு சென்றிருந்தனர். கொலை குறித்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பலனில்லை: இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியும் எந்தவிதமான துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து இருவரையும் விசாரணையில் இருந்து விடுவித்தனர். குற்றவாளிகள் யார் என்பது குறித்த தொடர் விசாரணை நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.