கோலாலம்பூர்: மலேசியாவில், 30 கிலோ எடையுள்ள போதைப் பொருளை கடத்தியதாக, ஒரு பெண் உட்பட, நான்கு இந்தியர்கள், கைது செய்யப்பட்டு உள்ளனர்.கோலாலம்பூர் விமான நிலைய, சுங்க அதிகாரி, பதாருதீன் முகமது ரபீக் கூறியதாவது:மலேசியாவுக்கு, போதைப் பொருள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில், 312 கிலோ, போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நைஜீரியாவைச் சேர்ந்த, 20 பேரும், இந்தியர்கள், 19 பேரும், ஈரானியர்கள், எட்டு பேரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த, நான்கு பேரும், மலேசியர்கள், மூன்று பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன், கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வந்த. 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உட்பட, நான்கு இந்தியர்கள், "கேடமைன்' என்ற போதைப் பொருளை கடத்தி வந்ததற்காகக் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து, 30 கிலோ எடையுள்ள, போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.மலேசியாவில், போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.