துபாய்: ஓமன் நாட்டில், இந்தியர் இருவர், மர்மமான முறையில் இறந்துள்ளனர்.ஓமன் நாட்டின் தலைநகர், மஸ்கட்டில் உள்ளது இமிதி. இந்த பகுதியில் கட்டுமான பணி நடக்கிறது. கர்நாடகாவை சேர்ந்த ஷரோன் டிசூசா,26, இவரது மைத்துனர் லகேலெத் டிசூசா,35 ஆகியோர், கட்டுமான பணிக்காக, இங்குள்ள பகுதியில், தங்கியிருந்தனர்.இதற்கிடையே, இருவரும் குளிருக்காக மூட்டிய தீயினால், ஏற்பட்ட நச்சு புகை தாக்கி மரண மடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே, அறையில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த, தீபக்,24, என்பவரும், ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவர்களுடன் தங்கியிருந்த, ஷரோனின் சகோதரர் சஜித் என்பவரை, போலீசார், விசாரித்து வருகின்றனர். "கார்பன் மோனாக்சைடு' என்ற வாயுவை இவர்கள் சுவாசித்ததால், பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது."உயிரிழந்தவர்களை, இந்தியாவுக்கு அனுப்ப தங்களிடம் பணம் இல்லை'என, அவர்கள் வேலை பார்த்த கம்பெனி கூறி விட்டது. இதையடுத்து, இந்திய தூதரகத்தின் மூலம் இருவரது உடலையும், கர்நாடகாவுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.