3 arrested for kidnapipng siddha doctor | சித்த வைத்தியரை கடத்திய மூன்று பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சித்த வைத்தியரை கடத்திய மூன்று பேர் கைது

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே, பணத்தகராறில், சித்த வைத்தியரை கடத்தி, வீட்டிற்குள் பூட்டி சிறைவைத்து மிரட்டிய,மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி,ராஜிவ்நகர், சித்த வைத்தியர் பாண்டியன்,53. இவர், கயத்தாறு, நாகலாபுரத்தைச்சேர்ந்த வெயிலுமுத்துவிடம்,42, இரண்டு ஆண்டிற்குமுன், 30,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதற்கு, தொடர்ந்து வட்டிப்பணம் தந்துள்ளார். சிறிதுகாலம், அவரால்,வட்டி தரமுடியாமல் போனது.
இதனிடையே, நேற்றுமுன்தினம் மதியம், ஆட்டோவில், தளவாய்புரத்திற்கு வந்த பாண்டியனை, வழிமறித்த வெயிலுமுத்து, பணம் கேட்டுள்ளார். அதற்கு, ஒருவாரத்தில் பணம் தருவதாக பதில் கூறவே, ஆத்திரமடைந்த வெயிலுமுத்து, நண்பர்கள் இருவருடன், பாண்டியனை கடத்தி, நாகலாபுரத்தில், வீட்டில் சிறைவைத்து பூட்டி, வட்டி மற்றும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து, பாண்டியன், மனைவி நாகராணியிடம், மொபைல் போனில் தெரிவித்துள்ளார். அவர், கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்யவே, போலீசார், நள்ளிரவு, நாகலாபுரம் சென்று, பாண்டியனை மீட்டனர். அவரை சிறைவைத்த, வெயிலுமுத்து, நண்பர்கள் குற்றாலிங்கம்,43, நாராயணனை,42, கந்துவட்டி கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை