லண்டன்: ""கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நினைக்கும், அரசின் நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்,'' என, அயர்லாந்து கர்தினால் தெரிவித்துள்ளார்.கர்நாடகாவை சேர்ந்தவர் சவீதா, 31. இவரது கணவர் பிரவீன், அயர்லாந்து நாட்டில், இன்ஜினியராக உள்ளார்.பல் மருத்துவரான சவீதாவுக்கு, அக்டோபரில், வயிற்று வலி ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், "உங்கள் வயிற்றில் வளரும் கரு, இயல்பான நிலையில் இல்லை. இதனால், வலி ஏற்பட்டுள்ளது' என்றனர்.இதைக் கேட்ட சவீதா, "17 வார கருவில் கோளாறு இருந்தால் கலைத்து விடுங்கள்' என்றார். ஆனால், "இது, கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு; கருவை கலைக்க முடியாது' என, டாக்டர்கள் மறுத்து விட்டனர்.ஒரு கட்டத்தில், சவீதா வயிற்றில் வளர்ந்த சிசு இறந்து விட்டது. தொப்புள் கொடி வழியாக, சவீதாவின் ரத்தத்தில் விஷம் பரவி, சவீதா இறந்து விட்டார்."கரு கலைப்பு செய்திருந்தால், சவீதா உயிர் பிழைத்திருப்பார்;அவரது மரணத்துக்கு டாக்டர்கள் தான் காரணம்' என, சவீதா கணவர் வழக்கு தொடர்ந்தார். இந்த பிரச்னை பூதாகரமானதையடுத்து, அந்நாட்டு பார்லிமென்டிலும் விவாதிக்கப்பட்டது.தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் கருகலைப்பு செய்யும் விதத்தில் சட்டதிருத்தம் கொண்டு வர, அயர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கு, அந்நாட்டின் கர்தினால், சீன் பிராடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அவர் தனது கிறிஸ்துமஸ் தின உரையின் போது குறிப்பிடுகையில், ""பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் சூழல் உள்ள நிலையில், கருக்கலைப்பு சட்டத்தில்திருத்தம் செய்ய முயற்சிக்கும் அரசின் முடிவை அனைவரும் எதிர்க்க வேண்டும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.