தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடலில் விழுந்து, தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை, வாலிபர் காப்பாற்றினார். திருவாடானை அருகே பாண்டுகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராமு மனைவி தவமணி, 35. கணவருடன் ஏற்பட்ட தகராறில் வேதனை அடைந்த தவமணி, நேற்று காலை 6 மணிக்கு, தொண்டி படகுகள் நிறுத்துமிடத்திற்கு(ஜெட்டி) சென்று கடலில் குதித்தார். இதை பார்த்த தொண்டி பால் வியாபாரி கணேசன், கடலில் குதித்து, தவமணியை
காப்பாற்றினார். இதுகுறித்து தொண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தொண்டி போலீசார், தவமணியிடம் விசாரணை செய்தனர். பின்னர் உறவினர்களை வரவழைத்து அறிவுரை கூறி,அவர்களுடன் தவமணியை அனுப்பி வைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.