Advertisement
தொடர்கிறது "டெங்கு': மதுரையில் மூவர் பலி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,23:53 IST

மதுரை: மதுரையில் "டெங்கு' காய்ச்சலுக்கு, அரசு மருத்துவமனையில் மூவர் பலியாகினர். மதுரை செல்லூர் செல்வம் மகள் ராஜாத்தி, 32. பாலமேடு மாரியம்மாள் கோயில் சுரேஷ் மகன் மோகன், 3. மேலூர் அண்ணாகாலனி ஜோசப் மகன் டேவிட்ராஜ், 11. மூவரும் அரசு மருத்துவமனையில் "டெங்கு' அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டனர். நேற்று சிகிச்சை பலனின்றி மூவரும் இறந்தனர். மதுரை பழங்காநத்தம் நடராஜன் மகள் ஸ்வாதிகா 13, பேரையூர், சந்தையர் பாண்டியராஜ் மகள் மணிமேகலை, 13, இருவரும் நேற்று முன்தினம் "டெங்கு' காய்ச்சலுக்கு இறந்தனர். மீண்டும் "டெங்கு' இறப்புகள் தொடர்வது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை "டெங்கு' காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் 48 பேர் இறந்தனர். அதில் மதுரையைச் சேர்ந்தவர்கள் 27 பேர். மூளைக்காய்ச்சலுக்கு 9 பேர் பலியாகினர். தற்போது ஏழு பேர் "டெங்கு' சிகிச்சையும், 30 பேர் அரசு கூறும் மர்மக்காய்ச்சலுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்கள் "டெங்கு' பாசிட்டிவ் இருந்தாலும், வைரஸ் காய்ச்சல் என்றே குறிப்பிடுகின்றனர். என்ன காரணம்: "டெங்கு' அறிகுறிகள் இருப்பது தெரியாமல், டாக்டரிடம் செல்லாமல், தாங்களாக மருந்துகளை நோயாளிகள் உட்கொள்கின்றனர். தாமதமான வருகையே, உயிரிழப்புக்கு காரணம். கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில், "மக்கள் தாங்களாக காய்ச்சலுக்கு மாத்திரை எடுக்கக்கூடாது. மருந்து கடைகளிலும் விற்கக்கூடாது', என்ற அறிவிப்பு, மருந்துக்கடைகளின் முன் வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர், பிள்ளைகளுக்கு
காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Guru - Batam,இந்தோனேசியா
27-டிச-201207:22:55 IST Report Abuse
Guru தினம் தினம் இப்படி மக்கள் உயிர் யிழந்துகொண்டு.., நேற்று 2 பேர் இன்று 3 பேர் ... சுகாதாரதுறையும் மருத்துவதுறையும் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்
Rate this:
0 members
0 members
8 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.