மதுரை: மின்தடை நேரங்களில், தடையின்றி பத்திரப்பதிவு செய்ய, அனைத்து அலுவலகங்களுக்கும், ஜெனரேட்டர்கள் வழங்கப்படுகின்றன. அரசுக்கு வருவாய் ஈட்டும் துறைகளில் பத்திரப்பதிவு முக்கியமானது. சில மாதங்களுக்கு முன், புதிய வழிகாட்டி மதிப்பு அமல்படுத்தப்பட்ட போதிலும், பத்திரப்பதிவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மின்தடை ஏற்படும் போது, அலுவல் பணி பாதிப்பதால், பதிவு செய்வதில் தாமதம் ஆகிறது. நல்ல நாளில் பதிவு செய்ய வேண்டும் என வருபவர்கள், "சென்டிமென்டாக' கருதுவதால், அரசுக்கு வருவாய் பாதிக்கிறது. இதை தவிர்க்க, முதற்கட்டமாக, அதிக பத்திரப்பதிவு நடக்கும் அலுவலகங்களுக்கு ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், மற்ற அலுவலகங்களுக்கும் வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கிடப்பில் "வெப்கேமரா' : பத்திரப்பதிவின்போது நடக்கும் ஆள்மாறாட்ட மோசடிகளை தடுக்க, "வெப்கேமரா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பத்திரப்பதிவு செய்பவர், வாங்குபவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுக்கு பதில், "வெப்கேமரா' மூலம் நேரடியாக படம் எடுக்கப்பட்டு, உடனடியாக பதிவு செய்யப்படும். மேலும், விரல் ரேகையும் பதிவு செய்யப்படும். மின்வெட்டால், இத்திட்டம் ஓராண்டாக கிடப்பில் உள்ளது. இதை முழுமையாக செயல்படுத்தினால் மட்டுமே பத்திரப்பதிவில் நடக்கும் மோசடிகளை தடுக்க முடியும். இது குறித்து, அரசு பரிசீலிக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.