மதுரை: மதுரையில் வன்முறையை தூண்டுவதாக பேசிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸூக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸூக்கு, அவரது வக்கீல், கலெக்டர் அன்சுல்மிஸ்ராவிடம் நேற்று விளக்கமளித்தார். மதுரையில் அனைத்து சமுதாய தலைவர்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பா.ம.க., தலைவர் மணி தலைமையில் டிச.,20ல் நடந்தது. இதில் ராமதாஸின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சு, ஜனநாயகத்திற்கு எதிராக, வன்முறையை தூண்டுவதாக உள்ளது எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தலித் அமைப்புகள் மற்றும் வக்கீல்கள் மதுரை கலெக்டர் அன்சுல்மிஸ்ராவிடம் மனு அளித்தனர். இதன் எதிரொலியாக, "மதுரைக்குள் நுழைய ஏன் தடை விதிக்கக் கூடாது' என கேள்வி எழுப்பி, டிச., 26க்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ராமதாஸூக்கு, கலெக்டர் நோட்டீஸ் அளித்தார். இதற்கு, ராமதாஸ் எழுதிய கடிதத்தை அவரது வக்கீல் பாலு, கலெக்டரிடம் அளித்து விளக்கமளித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.