சிவகங்கை:சவுதி அரேபியாவில், தவிக்கும் சிவகங்கை, ராமநாதபுரம் வாலிபர்களை மீட்கக் கோரி, கலெக்டர் ராஜாராமனிடம், பெற்றோர் மனு செய்தனர். சிவகங்கை, காரைக்குடி அருகே, சங்கந்திடலை சேர்ந்த மெய்யர் மகன் பொசலான், 35. இவர், ஏஜன்ட் மூலம், ஓராண்டிற்கு முன், சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றார். ஒரு ஆண்டாக, எந்த கம்பெனியிலும், அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. சமீபத்தில், அங்குள்ள ஒரு கம்பெனியினர், பொசாலான் மற்றும் இரண்டு பேரை, அறையில் அடைத்து வைத்துள்ளனர். பாஸ்போர்ட் உட்பட அனைத்தையும், அவர்கள் வாங்கி வைத்துக் கொண்டனர். இதனால், ஊர் திரும்ப முடியாமல் மூவரும் தவிக்கின்றனர். அவர்களை மீட்கக் கோரி, பொசலானின் உறவினர் சேது, சிவகங்கை கலெக்டர் ராஜாராமனிடம் மனு கொடுத்தார். ஆவண செய்வதாக, கலெக்டர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.