சென்னை: சென்னையில் உள்ள, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின், நீதித்துறை உறுப்பினராக, கே.இளங்கோ, மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் நியமனம், இடமாற்றம், "சஸ்பெண்ட், டிஸ்மிஸ்' மற்றும் பணி விதிகள் தொடர்பான வழக்குகளை, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் விசாரிக்கிறது. சென்னை ஐகோர்ட் வளாகத்தில், தீர்ப்பாயம் செயல்படுகிறது. இந்த தீர்ப்பாயத்தில், நீதித்துறையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும், நிர்வாக உறுப்பினராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், செயல்படுவர். தீர்ப்பாயத்தின், நீதித்துறை உறுப்பினராக, பதவி வகித்த, இளங்கோ, கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். மீண்டும், தீர்ப்பாய உறுப்பினராக, இளங்கோ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். இவர், ஐந்து ஆண்டு காலம், அல்லது 65 வயது, இதில் எது முந்தி வருகிறதோ, அதுவரை, பதவி வகிப்பார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.