நாமக்கல்: "நடப்பு ஆண்டு, கரும்பு டன் ஒன்றுக்கு, 3,000 ரூபாய் அறிவிக்க கோரி, நாளை மறுநாள், சென்னையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில், விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டும்' என, மோகனூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கச் செயலர், நவலடி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு, 2012 - 13 ஆண்டுக்கான, கரும்பு அரவை பருவத்துக்கு நியாயமான ஆதாய விலையாக, டன் ஒன்றுக்கு, 1,700 ரூபாய் என, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதையடுத்து, மாநில அரசின் பரிந்துரை விலையாக, போக்குவரத்துச் செலவு, 100 ரூபாய் உட்பட, டன் ஒன்றுக்கு, 2,350 ரூபாய் என, தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. டன் ஒன்றுக்கு, 3,000 ரூபாய் வழங்கப்படும் என, எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மத்திய அரசு, நடப்பு அரவை பருவத்துக்கு ஆதார விலையாக, கடந்த ஆண்டை விட, 250 ரூபாய் உயர்த்தி வழங்கி உள்ளது. ஆனால், தமிழக அரசு, தன்பங்கிற்கு பரிந்துரை விலையாக உயர்த்தி வழங்காமல், கடந்த ஆண்டு விலையாக, வண்டி வாடகை உட்பட, 2,100 ரூபாயுடன், மத்திய அரசு அறிவித்துள்ள, 250 ரூபாயை சேர்த்து, 2,350 ரூபாய் என, அறிவித்துள்ளது, ஏமாற்றம் அளிக்கிறது. சட்டசபை தேர்தலில், "கரும்பு டன் ஒன்றுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படும்' என, தமிழக முதல்வர் உறுதி அளித்து விட்டு, தற்போது, இரண்டு ஆண்டாக அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், கட்டுபடியாகாத விலையை அறிவித்துள்ளார். நடப்பு கரும்பு அரவை பருவத்துக்கு, கரும்பு டன் ஒன்றுக்கு, 3,000 ரூபாய் அறிக்கக் கோரி, டிச., 29ம் தேதி, சென்னையில் கரும்பு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டத்தில் உள்ள எட்டு கோட்டங்களை சேர்ந்த விவசாயிகள், இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.