சென்னை: முண்டியம்பாக்கம் - பேரணை ரயில் நிலையங்கள் இடையே, இரண்டாவது அகல ரயில் பாதையில், ரயில் இயக்கி சோதனை செய்யப்படுவதால், நாளை, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் உட்பட, ஆறு எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூரிலிருந்து இயக்கப்படும், செந்தூர் எக்ஸ்பிரஸ், நாளை (28ம் தேதி) சென்னை எழும்பூருக்கு, 2 மணி, 40 நிமிடங்கள் தாமதமாகவும், திருச்சியிலிருந்து இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ், 2 மணி, 25 நிமிடங்கள் தாமதமாகவும் வந்தடையும். சென்னை எழும்பூரிலிருந்து, மதுரைக்கு இயக்கப்படும், வைகை எக்ஸ்பிரஸ், இரண்டு மணி நேரம் தாமதமாகவும், குருவாயூர் எக்ஸ்பிரஸ், விழுப்புரத்திற்கு, 1 மணி, 50 நிமிடங்கள் தாமதாகவும், திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், 1 மணி, 20 நிமிடங்கள் தாமதாகவும், சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.