சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, குஜராத்திலிருந்து மேலும் இரண்டு டிரான்ஸ்பார்மர்கள்,நேற்று சென்னை வந்தது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, தேவையான மின்சார விநியோகத்திற்கு, கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையிலும், ஆலந்தூர் மற்றும் சென்ட்ரல், மெட்ரோ ரயில் நிலையல்களிலும், 305 கோடி ரூபாய் செலவில், துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. தற்போது, கோயம்பேடு மெட்ரோ ரயில் பணி மனையிலும் (யார்டு), ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திலும், துணை மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதில்,கோயம்பேடு மெட்ரோ ரயில் துணை மின் நிலையத்திற்கு, குஜராத்திலிருந்து 110/25 கிலோ வாட் மற்றும் 110/33 கிலோ வாட், டிரான்ஸ்பார்மர்கள் இரண்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, துணை மின் நிலையத்தில், நிலைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையத்திற்கு மேலும், இரண்டு டிரான்ஸ்பார்மர்கள், 110/25 மற்றும் 110/33 கிலோ வாட் டிரான்ஸ் பார்மர்கள் குஜராத்திலிருந்து, நேற்று சென்னை வந்து சேர்ந்தது. இந்த டிரான்ஸ்பார்மர்கள், நிலையத்தில் நிலைப்படுத்தும் பணிகள், விரைவில் துவங்கப்பட உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.