சென்னை: கூட்டுறவுச் சங்க உதவியாளர் பணியிடங்களுக்கு, நாளை நேர்காணல் துவங்குகிறது.
தமிழகம் முழுவதும், கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கு, மாநில ஆள் சேர்ப்பு மையம், இம்மாதம், 9ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது. இதில், 2 .23 லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், சென்னை எத்திராஜ் கல்லூரியில் நாளை துவங்கி, ஜனவரி, 3ம் தேதி வரை, நேர்காணல் நடக்கிறது.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்கள் விவரங்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அழைப்புக் கடிதங்களை, www.tncoopsrb.org என்ற இணைய தளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்கள் சுயகுறிப்பு மற்றும் சான்றிதழ் விவரங்களை, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், மாவட்ட வாரியாக, உதவியாளர் பணிக்கான காலிப் பணியிடங்கள் தொடர்பான விவரங்கள், இணையதளத்தில் உள்ளன. இதில், தங்கள் விருப்ப மாவட்டம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பெயர்களை, உரிய படிவத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நேர்காணலில், பதிவேற்றம் செய்த விவரங்களின் நகல்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன், தங்களுக்கு உரிய தேதி மற்றும் நேரத்தில், பங்கேற்கலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.