விருதுநகர்: ""தேசிய மாணவர் படை கூட்டுப்பயிற்சி முகாம், மாணவர்களை ராணுவத்திற்கு தயார் படுத்துகிறது,'' என, கர்னல் கே.என். பிரசாத் தெரிவித்தார். விருதுநகர் கே.வி.எஸ்., ஆண்கள் பள்ளியில், மாநில அளவிலான தேசிய மாணவர் படை, கடற்படை பிரிவு மாணவர்களுக்கான, கூட்டுப்பயிற்சி முகாம் நடக்கிறது. பல மாவட்ட கல்லூரிகளில் இருந்து , 744 மாணவர்கள், 55 மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு, உடற்பயிற்சி, அணிவகுப்பு, துப்பாக்கிசுடுதல் , படகு ஓட்டுதல், போர்க்கப்பல், நீர் மூழ்கிக்கப்பல், தகவல் தொடர்பு, திசைகள் அறிதல், முதல் உதவி, குடில் அமைத்தல், கப்பல் படை வரலாறு குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கப்பல் படைப்பிரிவு கண்காணிப்பாளர் தண்டிராஜன், சி.ஐ., சுந்தர ராஜன்,வேல் முருகன், விஜய் வீரன்,பிரகாஷ் பயிற்சி வழங்குகின்றனர். சிறந்தபடை வீரராக தேர்வு பெற்று, தங்கப்பதக்கம் வென்ற, அமெரிக்கன் கல்லூரி மாணவர் அரவிந்த்,"" நான் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். தமிழக பண்பாடு, கலாச்சாரங்களை அறிய, இந்த முகாம் உதவியது. மாணவர்களிடையே தலைமைப்பண்பு, ஒழுக்கத்தை வளர்க்கிறது. கப்பல் இயக்குதல், துப்பாக்கிகளை கையாளுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுவதால், தேர்ச்சிபெறும் பலர், குடியரசு தின அணிவகுப்பு, கப்பல் படை அணிவகுப்பு, நைவ்சானிக் முகாமுக்கு தேர்வு செய்யப்படுவர்,'' என்றார்.
தியாகராஜர் கல்லூரி மாணவி கே.சூரியமாதா,"" மாணவிகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப பயப்படும் நிலையில், தேசிய மாணவர் படை, கப்பல்படைப்பிரிவு முகாமில் கலந்து கொள்ள, பெற்றோர்கள் தயக்கமின்றி அனுப்புகின்றனர். வெளி உலகில் பயமில்லாமல் வாழ, இந்த முகாம் கற்றுத்தருகிறது. படிப்பு மட்டுமே இல்லாமல், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு, இந்த முகாம் உதவுகிறது,'' என்றார்.
கமாண்டிங் அதிகாரி கர்னல் கே.என். பிரசாத்,"" மாணவர்களுக்கு, தொழில் நுட்ப ரீதியாக கப்பல்கள் இயக்குதல், நீச்சல் பயிற்சி, முதலுதவி, தீயணைப்பு பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இது, மாணவர்களை ராணுவத்திற்கு தயார் படுத்துகிறது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.