சென்னை: வங்கக் கடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணாக, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக, பாம்பன், வேதாரண்யத்தில் தலா ஒரு செ.மீ., மழை பதிவாகியது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறியதாவது: அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், பிற பகுதியில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடலோர பகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் தரைக்காற்று அவ்வப்போது பலமாக வீசக்கூடும். சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தரைக்காற்றும் அவ்வப்போது வீசும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.