திருமங்கலம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்திய, "வால்மார்ட்' நிறுவன அலுவலக முற்றுகைப் போராட்டத்தில், அலுவலகத்தின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதால், போலீசார் தடியடி நடத்தினர்.
சில்லரை வணிகத்தில், அந்நிய முதலீட்டுக்கு எதிராக போராடி வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அண்ணாநகர் மேற்கு விரிவு வடக்கு பிரதான சாலையில் அமைந்துள்ள, பன்னாட்டு நிறுவனமான, "வால்மார்ட்' நிறுவன அலுவலக முற்றுகை போராட்டத்தை நேற்று நடத்தின. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா.பாண்டியன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், கட்சி தொண்டர்கள், காலை, 11:15 மணிக்கு அண்ணாநகர் மேற்கு பஸ்நிலையம் அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, "வால்மார்ட்' நிறுவன அலுவலகம் அருகில் வந்தனர். அங்கு போலீசார் அமைத்த தடுப்புகளை தள்ளிவிட்டு, முன்னேறி அலுவலகத்திற்கு முன் வந்தனர். நூற்றுக் கணக்கில் குவிந்திருந்த போலீசார், போராட்டக்காரர்களை, அலுவலகத்தினுள் நுழைய விடாமல் தடுத்தனர். அப்போது, போராட்டக்காரர்கள் சிலர், அலுவலகத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலகத்தின் மேற்பகுதியிலுள்ள, கண்ணாடியின் சிறுபகுதி உடைந்தது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது, போலீசார், லேசான தடியடி நடத்தினர். பின், போராட்டக்காரர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.