சென்னை: சேப்பாக்கத்தில் இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி எதிரொலியாக, சென்னையில் பாகிஸ்தானியர் யாராவது ஊடுருவி இருக்கின்றனரா என, போலீசார் சோதனை நடத்தினர்.
இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, 30ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகளும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்து விட்டன. சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தவிர, சூதாட்டத்தில் யாரும் ஈடுபடாத வகையில், சவுகார்பேட்டை, பெரியமேடு உள்ளிட்ட பல பகுதிகளில், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக, பாகிஸ்தானியர் யாரும், சென்னையில் தங்கியிருக்கின்றனரா என, சென்ட்ரல், எழும்பூர் மற்றும் கோயம்பேடு சுற்று வட்டாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில், போலீசார் நேற்று, சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் யாரும் சிக்கவில்லை. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த, முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, ராஜஸ்தானியர், 28 பேர், கைது செய்யப்பட்டு, அவர்களிடம், பல லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தடைகோரி மனு : சுவாமி விவேகானந்தர் தர்ம பிரச்சார சேவா சமதி என்ற அமைப்பின், மாநில அமைப்பாளர் ராஜகுரு தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். கமிஷனரிடம் புகார் கொடுத்து விட்டு வந்த ராஜகுரு கூறியதாவது: சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், பாகிஸ்தான் ரசிகர்கள் போர்வையில், பயங்கரவாதிகள் ஊடுருவி சதி வேலையில் ஈடுபடக்கூடும் என்று அஞ்சுகிறோம். மும்பை தாக்குதல் உட்பட, நம் நாட்டில் பல்வேறு தாக்குதல்களுக்கும், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களே காரணமாக இருந்துள்ளன. கசாப் தூக்கில் இடப்பட்ட நிலையில், பழிக்கு பழி தீர்ப்போம் என, தீவிரவாத அமைப்புக்கள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளன.
கிரிக்கெட் விளையாட்டு தீவிரவாதத்திற்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். எங்கள் மனுவை, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பியுள்ளனர். நாங்கள் கொடுத்த புகார் விளம்பரத்துக்காக அல்ல; எங்கள் உணர்வு நாட்டின் நலன் சார்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.