விழுப்புரம்: வளவனூர் அருகே, மாட்டு வண்டிகள் மீது, தனியார் பஸ் மோதிய விபத்தில், ஒருவர் இறந்தார்; மூன்று மாடுகளும் இறந்தன. விழுப்புரம் அடுத்த, கோலியனூரைச் சேர்ந்தவர், அம்பலவாணன், 50. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன், 29, என்பவரும், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, பண்ருட்டி நோக்கி இரண்டு மாட்டு வண்டிகளில், சென்று கொண்டிருந்தனர். சுந்தரிபாளையம் காலனி அருகே சென்ற போது, தஞ்சாவூர் நோக்கிச் சென்ற, தனியார் பஸ், மாட்டு வண்டிகளின் பின்புறத்தில், திடீரென மோதியது. இதில், அம்பலவாணன், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்தில், மூன்று மாடுகள் இறந்தன. படுகாயமடைந்த கன்னியப்பன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார்.வளவனூர் போலீசார், வழக்குப் பதிந்து, தஞ்சாவூர் மாவட்டம், தோட்டக்கனியைச் சேர்ந்த பஸ் டிரைவர், பிரகலாதனை கைது செய்தனர்.
திருட்டு மணலால் தொடரும் உயிரிழப்பு : தென்பெண்ணை ஆற்றங்கரையிலிருந்து, தினந்தோறும், அதிகாலை நேரத்தில், நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிச் செல்லப்படுகிறது. இந்த மாட்டு வண்டிகளில், பிரதிபலிப்பான் பொருத்தப்படாததால், வரிசையாக அணிவகுத்துச் செல்லும் மாட்டு வண்டிகள் மீது, கனரக வாகனங்கள் மோதி, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விபத்துகளில் மாடுகள் மட்டுமின்றி மாட்டு வண்டியை ஓட்டிச் செல்பவர்களும் இறப்பது தொடர்கதையாகவே உள்ளது. இதைத் தடுக்க போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.