Advertisement
கோவில் சிலைகளை கடத்தி ஒரு கோடிக்கு விற்க திட்டம் : சிக்கிய மூவரிடம் விசாரணை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 டிச
2012
00:08

நாகப்பட்டினம்: நாகை அருகே கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள், சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு, கடத்த வைத்திருந்தபோது சிக்கின. சிலைகளை கைப்பற்றி, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம், எழுமேஸ்வரமுடையார் கோவிலில், கடந்த, ஏப்ரல் 1ம் தேதி, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஆறு ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வாய்மேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நாகை, ஏ.எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி தலைமையில் போலீசார், நேற்று முன்தினம், வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த இருவரிடம், போலீசார் விசாரித்தனர். அவர்கள் பழமையான கோவில்களை நோட்டமிட்டு, ஐம்பொன் சிலைகளைக் கொள்ளையடிப்பவர்கள் என்பதும், ஆயக்காரன்புலம் கோவிலில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் என்பதும், தெரிய வந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின்படி, சென்னை, மகாபலிபுரத்தில் உள்ள தனியார் சிற்ப கலைக்கூடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ஐம்பொன்னாலான, மூன்றரை அடி உயரமுள்ள லட்சுமணன், மூன்று அடி உயர பெருமாள், ஒன்றரை அடி உயர குருவாயூரப்பன், இரண்டு அடி உயரமுள்ள ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய ஐந்து ஐம்பொன் சிலைகளை போலீசார் கைப்பற்றினர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.