மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் உரிமம் பெற்று, வாணவெடி தயாரிக்கும் ஆலைகளும், உரிமம் புதுப்பிக்காமல், அதிகாரிகள், "ஆசியோடு' நடக்கும் ஆலைகளிலும், வாணவெடி மட்டுமின்றி, பாறைகளை தகர்க்கும் தோட்டகளை சட்டவிரோதமாக தயாரிப்பதால் ஏற்படும் விபத்தில், அப்பாவி மக்கள் உடல் கருகி பலியாவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில், 15 இடங்களில், வாணவெடி மற்றும் நாட்டுவெடி தயாரிக்கும் கூடம் மற்றும் குடோன் உள்ளது. ஆலைகளில், எந்த வெடி தயாரிக்க உரிமம் பெற்றுள்ளனரோ, அதை மட்டுமே தயாரிக்க வேண்டும்.
ஆனால், அதிகாரிகளை, "கவனிக்க' வேண்டி இருப்பதால், அதை சமாளிக்க, கூடுதல் லாபம் பெற்று தரும், பாறைகளை தகர்க்கும் சக்தி வாய்ந்த தோட்டாக்களையும், உரிமையாளர்கள் சட்டவிரோதமாக தயாரிக்கின்றனர்.
சேலம் மாவட்ட, வெடி தயாரிப்பு ஆலைகள் தயாரிக்கும், சக்தி வாய்ந்த நாட்டு வெடிகளை, சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்துவதும், அதற்கு அப்பகுதியை, "மாமூல்' ஆக, கட்டுப்பாட்டில் வைத்துள்ள, போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதும், அரசின் கவனத்துக்கு வந்தது.
இதனால், கடந்த மே மாதம், அனைத்து வெடி தயாரிப்பு கூடம், குடோன்களில், மேட்டூர் ஆர்.டி.ஓ., சூர்யபிரகாஷ், சோதனை மேற்கொண்டார். அப்போது பெரும்பாலான வாணவெடி தயாரிப்பாளர்கள், அரசின் விதிகளை பின்பற்றாமல் இருப்பது தெரிய வந்தது. விதியை கடைபிடிக்காத வெடி தயாரிப்பு கூடம், குடோன்களின் உரிமத்தை ரத்து செய்ய, அரசுக்கு பரிந்துரை செய்தார். இதனால், வாணவெடி தயாரிப்புக்கான உரிமமும் நிறுத்தி வைக்கப்பட்டது. அரசு விதிகள் படி வெடி தயாரிப்பு கூடம், குடோன்களை மாற்றியமைக்க, தயாரிப்பாளர்கள், கால அவகாசம் கேட்டனர். கோரிக்கையை ஏற்று, மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. கால அவகாசம், கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த நிலையில், கடந்த மாதம், விதிமுறைப் படி மாற்றியமைத்த வாணவெடி தயாரிப்பு ஆலைகளின் உரிமம், புதுப்பித்து வழங்கப்பட்டது.
செங்காட்டூர் பிரிவு ரோட்டில் இயங்கிய சாந்தியின் ஆலை, சட்டவிதி முறைப்படி மாற்றம் செய்யப்படாததால், உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. உரிமம் வழங்கக் கோரி சாந்தி, எட்டு மாதமாக, மேட்டூர், ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு நடந்தும், உரிமம் புதுப்பித்து வழங்கப்படவில்லை. எனினும், சாந்தி தன் ஆலையில் சட்டவிரோதமாக வாணவெடிகள், பாறை தகர்க்கும் வெடிகளை தயாரித்துள்ளார். ஆலையில், எட்டு மாதமாக சட்டவிரோதமாக வெடிகள் தயாரிப்பது தெரிந்தும் வருவாய்துறை, போலீசார், க்யூ ப்ராஞ்ச் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது பொதுமக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டூர் ஆர்.டி.ஓ., சூர்யபிரகாஷ் கூறுகையில், ""செங்காட்டூர் வாணவெடி ஆலையை, ஏழு மாதங்களுக்கு முன், ஆய்வு செய்தபோது, அங்கு எந்தவித வெடி தயாரிப்பு பணியும் நடக்கவில்லை. அரசு விதிமுறைகளும் கடைபிடிக்காததால், உரிமம் புதுப்பிக்க மறுத்து விட்டோம். ஆனால், உரிமம் புதுப்பிக்காமல் சட்ட விரோதமாக வெடிகள் தயாரித்து விபத்துக்கு காரணமாகி விட்டது,'' என்றார்.
பணம் கொழிக்கும் வெடி தயாரிப்பு : கனிம வளம் மிகுந்த, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குவாரிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. குவாரிகளில் பாறைகளை தகர்க்க தோட்டா பயன்படுத்துகின்றனர். இதனால், மூன்று மாவட்டங்களிலும் பாறை தகர்க்கும் தோட்டாக்கள் தேவை அதிகமாக இருக்கிறது. குவாரி உரிமையாளர்கள், தோட்டாக்களை சட்டவிரோதமாக அதிக விலைக்கு வாங்குகின்றனர். தோட்டாக்கள் மூலமே வெடி தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. இதனால், வாணவெடி தயாரிப்புக்கு என, உரிமம் வாங்குபவர்கள், பெரும்பாலானோர் பாறை தகர்க்கும் தோட்டாக்களை, சட்டவிரோதமாக தயாரித்து விற்பனை செய்கின்றனர். விபத்துக்கு இதுவும் ஒரு காரணம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.