சிதம்பரம்:நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனக் கோரி சிறுதொழில் முனைவோர் அமைப்பு சார்பில் சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழகத்தில் நிலவி வரும் மின் வெட்டு காரணமாக சிறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சமாளிக்க நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும் சிதம்பரம் தொழில் முனைவோர் அமைப்பு சார்பில் சிதம்பரம் ரயில் நிலையத்தில், நேற்று மதியம் 12.20 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை நகர அமைப்பாளர் சிவப்பிரகாசம் தலைமையில் மறித்து போராட்டம் நடத்தினர். இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், மீனா ஆகியோர் மறியலில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்தனர். மறியலால் 10 நிமிடங்கள் தாமதமாக ரயில் 2.30 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.