கோவை: சேலத்தில் செயல்பட்ட மோசடி நிதி நிறுவனம் மீது, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தை தலைமையிடமாக கொண்ட, "கே.ஜி.ஆர்., மல்டிசேர் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை, இரு ஆண்டுகளுக்கு முன், கோவிந்தராஜ் என்பவர் துவக்கினார். மனைவி கீதாலட்சுமி, உறவினர் அமுதா, நிர்வாக இயக்குனர்களாக செயல்பட்டனர். நிறுவனத்தில், "10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், பத்து மாதங்களுக்கு, மாதந்தோறும், ஒரு லட்சம் வீதம் வழங்கப்படும்; பத்தாவது மாத இறுதியில், முதலீடு செய்த 10 லட்சம் திரும்ப வழங்கப்படும்' என அறிவித்துள்ளனர். விளம்பரத்தை நம்பி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்கள், முதலீடு செய்தனர். முதல் இரு மாதங்கள், பணம் கிடைத்துள்ளது. இதற்கு பின், பணம் வழங்காமல் இழுத்தடித்ததால், சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள், சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். தலைமறைவான கோவிந்தராஜை, அக்டோபர் மாதம், போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு, கோவை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
கடந்த 6ம் தேதி, வாழப்பாடியில் பதுங்கியிருந்த அமுதாவை, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சேலத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள், நேற்று கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். புகார் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். 800க்கும் மேற்பட்டோரிடம், 200 கோடி அளவுக்கு பெற்று மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.