பழநி: பழநி கோயிலில், பஞ்சாமிர்தம் தயாரிக்க, தேவையான பழங்கள் "ஸ்டாக்' இல்லாததால், தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், தனியார் கடைகளில் விலை அதிகரித்துள்ளது. பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். மலைக்கோயில் மூன்று கடைகளிலும், அடிவாரம், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள கடைகளிலும் தேவஸ்தான பஞ்சாமிர்தம் "ஸ்டாக்' இல்லை.
விலை உயர்வு: இதனால், பக்தர்கள் தனியார் கடைகளில் பஞ்சாமிர்தம் வாங்க குவிகின்றனர். இதை பயன்படுத்தி, சில கடைக்காரர்கள் அரைக்கிலோ 30 ரூபாய்க்கு விற்ற பஞ்சாமிர்தத்தை, தற்போது 40 முதல் 50 ரூபாய் வரை விலை உயர்த்தியுள்ளனர். பக்தர்களும் வேறு வழியின்றி வாங்கிச் செல்கின்றனர். பழநி கோயிலுக்கு, ஆண்டுக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் தரும், பஞ்சாமிர்தம் தயாரிப்பில், தேவஸ்தான நிர்வாகம் கவனம் செலுத்தவேண்டும்.முக்கிய விழாக்காலங்கள், விசேஷ நாட்களில் கூடுதலாக தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு.
கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""பஞ்சாமிர்த டப்பாக்களை வழங்குவதில், தனியார் நிறுவனம் காலதாமதம் செய்கிறது. வாழைப் பழங்கள் வழங்கும் ஒப்பந்ததாரரிடம் பழம் கிடைக்காததாலும், தயாரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் தட்டுபாடு நீங்கி விடும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.