பழநி: தைப்பூசத்திருவிழா வருகையையொட்டி, பாதயாத்திரையாக பழநிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க, அரசு முன்வர வேண்டும்.
சென்னை, மதுரை, சிவகங்கை, தேனி, திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக, பழநிக்கு வருகிறார்கள். இந்தாண்டு, பழநியில் தைப்பூசவிழா, வரும் ஜன., 21ல் கொடியேற்றத்துடன் துவங்கி, ஜன.,27 ல் தேரோட்டம் நடைபெற உள்ளது. பாதயாத்திரை பக்தர்களுக்காக அகலப்படுத்தப்பட்ட ரோடு, பல இடங்களில் சேதமடைந்துள்ளது. நடுரோட்டில் பக்தர்கள் நடந்து செல்வதால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ரோட்டோர கடைகளில், சுகாதாரமற்ற உணவு, கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் உபயோகம் தாராளமாக உள்ளது. மலைக்கோயிலை சுற்றிலும், நடைபாதையை ஆக்கிரமித்து தனியார் கடைகள் உள்ளன. அவற்றை நகராட்சி, கோயில் நிர்வாகம், போலீசார் கண்டுகொள்ளவில்லை.
பஸ் ஸ்டாண்டில் டிரைவர்கள் விருப்பம்போல் பஸ்களை நிறுத்துவதால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. பல ஓட்டல்களில் விலைப்பட்டியல் இல்லாமல், கூடுதல் விலைக்கு உணவுப்பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
பேரூராட்சி, ஊராட்சியில் பணியாளர்கள் மூலம் ரோட்டின் கற்களை அகற்றி சுத்தப்படுத்தல், உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.