பொள்ளாச்சி: ராஜஸ்தான் அருகே, போலீசை கொலை செய்து, பொள்ளாச்சி அருகே, குடும்பத்துடன் பதுங்கியிருந்தவர்களை, போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், கோல்பூர் டி.கோலி ஸ்டேஷனில், எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் சுரேஷ்; தலைமை காவலராக இருந்தவர் ராஜேந்திர ராவ். இவர்கள், கடந்த 13ம் தேதி, ஜெய்ப்பூரை சேர்ந்த ராம்பீர், 65 என்பவரை, ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், விசாரணைக்கு வர மறுத்ததுடன், ராம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினர், போலீசாரை தாக்கியுள்ளனர். இதில், ராஜேந்திர ராவ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
படுகாயமடைந்த சுரேஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். சம்பவத்தில் தொடர்புடையோர், பொள்ளாச்சி அருகே உள்ள கெங்கம்பாளையத்தில் பதுங்கியிருந்தது தெரிந்தது. இதையடுத்து, கோவை போலீசார், குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கெங்கம்பாளையத்தில் பதுங்கியிருந்த ஏழு பேரைக் கைது செய்தனர்; தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர். கைதானவர்கள், ராஜஸ்தான் அழைத்து செல்லப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.