பழநி: கேரள மாநிலம் கூட்டளை வனப்பகுதியில் சந்தனக்கட்டை கடத்தல் காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படும் பகுதியில், பழநி, அமராவதி வனத்துறையினர், திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் போலீசார், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சேலம் கொல்லிமலை பெண்டுபட்டியைச் சேர்ந்த சக்கரவர்த்தி, இவரை சந்தனமரம் கடத்தியதாக, கேரள வனத்துறை கைது செய்தது. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் போது, தன்னுடன் வந்த இரண்டுபேரை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் நிலை தெரியவில்லை என கூறியுள்ளார். இது குறித்து கேரள வனத்துறை மீது வழக்கு பதிந்த போலீசார், டிச.16 மறையூர் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். பழநி வனப்பகுதியினர் உதவியுடன், குதிரையாறு அணை வழியாக துப்பாக்கி சூடு நடந்தாக கூறப்படும் கூட்டளை வனப்பகுதியை பார்வையிட்டனர். அங்கு சிதறிக்கிடந்த தலைமுடி, ரத்தம் போன்றவற்றை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குழப்பம்: துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படும் பகுதி தமிழக வனப்பகுதியில் வருவதால் இது குறித்த விசாரணையை யார் மேற்கொள்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. பழநி வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியா அல்லது அமராவதி வனச்சரகத்திற்குட்பட்டதா என தெரிந்துகொள்வதற்காக, அப்பகுதியை பார்வையிட்டு, ஆய்வு செய்வதற்காக திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் போலீசார், தடயவியல் நிபுணர்கள், பழநி வனத்துறையினர், அமராவதி வனத்துறையினர் கொண்ட குழுவினர், குதிரையாறு அணை வழியாக சென்று . துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படும் இடத்தை பார்வையிட்டனர்.
பழநி வனரேஞ்சர் கணேசன் கூறுகையில்,"" சம்பவம் நடந்தாக கூறப்படும் கூட்டளை வனப்பகுதி, பழநி வனப்பகுதியிலிருந்து 2 கீ.மீ., தூரம் உள்ளது. ஆகையால் இப்பகுதி திருப்பூர் மாவட்டம் அமராவதி வனச்சரகத்தை சேர்ந்த பகுதியாகும். துப்பாக்கி சூடு விவகாரம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வனத்துறை, போலீசார் விசாரணை மேற் கொள்வார்கள்,' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.