ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் மர்மக் காய்ச்சலால் பள்ளி மாணவி இறந்தார். கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் மங்கையர்கரசி. இவரது மகள் கவிதா, 13. அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார்.
இவருக்கு நேற்று முன்தினம் காலை திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடன் ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர் முதலுதவிக்குப் பின் சிதம்பரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கவிதா இறந்தார். ஒரே நாள் காய்ச்சலில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவிதா இறந்தது டெங்கு காய்ச்சலால் இருக்கலாம் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.