கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, அனுமதியின்றி நடத்தப்பட்ட எருது விடும் விழாவில், மாடு முட்டி வாலிபர் பலியானார்; 50 பேர் காயம் அடைந்தனர். கிருஷ்ணகிரி அடுத்த, இட்டிக்கல் அகரம் கிராமத்தில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதாசி திருவிழாவை ஒட்டி, எருது விடும் நிகழ்ச்சி நடக்கும். இதற்காக, ஊர் கவுண்டர் நாகராஜ், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் அனுமதி கேட்டிருந்தார்; போலீசார் எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்கவில்லை.
இதை மீறி, நேற்று முன்தினம், எவ்வித பாதுகாப்பும் இன்றி, இட்டிக்கல் அகரம் கிராமத்தில், எருதுவிடும் விழா நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள், ஒரே இடத்தில் நிறுத்தி, ஓட விடப்பட்டது. இதை காண, ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடினர். அப்போது ஒரு சில எருதுகள், கூட்டத்துக்குள் புகுந்து ஓடிய போது, எந்த பக்கம் செல்வது என, தெரியாமல், அங்கும், இங்கும் பொதுமக்கள் ஓடியதில், மாட்டின் கொம்பில் சிக்கி, இருவர் படுகாயமடைந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். படுகாயமடைந்த இருவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், கொப்பக்கரையை சேர்ந்த, நாகராஜ், 41, சிகிச்சை பலனின்றி, நேற்று முன் தினம் இரவு இறந்தார். இட்டிக்கல் அகரம், வி.ஏ.ஓ., கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் அனுமதியின்றியும், உரிய பாதுகாப்பு இன்றியும் ஜல்லிகட்டு நடத்திய ஊர் கவுண்டர் நாகராஜ், தலைவர் உள்ளிட்ட, 11 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதனால், முக்கிய பிரமுகர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.