Woman to donate 400 blankets for settling accident case | இப்படியும் ஒரு மனிதாபிமான மனிதர்!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இப்படியும் ஒரு மனிதாபிமான மனிதர்!

Added : டிச 27, 2012 | கருத்துகள் (15)
Advertisement
இப்படியும் ஒரு மனிதாபிமான மனிதர்!,Woman to donate 400 blankets for settling accident case

புதுடில்லி :காரை வேகமாக ஓட்டி, படுகாயமடைய வைத்த போதிலும், காரை ஓட்டிய பெண்ணை தண்டிக்க விரும்பாத நபர், "விபத்திற்கு இழப்பீடாக, 400 கம்பளிகளை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்' என்ற வினோத கோரிக்கையை முன்வைத்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

டில்லியை சேர்ந்தவர் தேவேந்தர் குப்தா. ஜனவரி மாதம், அலுவலகம் சென்று, இரவில், "பைக்'கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால், பைக்கை நிறுத்தி இருந்தார்.அப்போது, அசுர வேகத்தில் பின்னால் வந்த கார், தேவேந்தர் குப்தா பைக் மீது மோதி, அவரை தூக்கி வீசியது. அந்த காரை, ருச்சி அகுஜா என்ற, பெண் ஓட்டி வந்தார். உடல் முழுக்க பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடிய குப்தாவை கண்டுகொள்ளாமல், அந்த பெண், காரை ஓட்டிச் சென்று விட்டார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிர் பிழைத்த குப்தா, படுகாயமடைய வைத்த ருச்சி அகுஜா மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ருச்சி மீதான தண்டனை நிரூபிக்கப்படுமானால், அவருக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் கிடைக்க வாய்ப்பு இருந்தது.

நேற்று முன்தினம், வழக்கு விசாரிக்கப்பட்டது.""ருச்சி செய்த குற்றத்திற்கு என்ன இழப்பீடு கோருகிறீர்கள்?'' என, நீதிபதி, பாதிக்கப்பட்ட தேவேந்தர் குப்தாவிடம் கேட்டார்.""என் மீது அவர் காரை மோதியது கூட தவறில்லை; நான் ரத்த வெள்ளத்தில் கிடந்த போது, கண்டுகொள்ளாமல் சென்றது தான் எனக்கு தவறாக படுகிறது. இதற்காக அவரிடம் இருந்து பணம் எதையும் பெற விரும்பவில்லை. செய்த தவறுக்கு தண்டனையாக, டில்லி குளிரில் அவதிப்படும் ஏழைகளில், 400 பேருக்கு, ருச்சி அகுஜா, கம்பளிகளை வழங்க வேண்டும்,'' என்றார்.

விசாரணைக்கு வந்திருந்த ருச்சி உட்பட, நீதிமன்றத்தில் இருந்த அனை வருக்கும், ஆச்சர்யமாக போனது. "இப்படியும் ஒரு நல்ல மனிதர் இருக்கிறாரே' என, பலரும் வியந்தனர்.தேவேந்தரின் கோரிக்கையை, ருச்சி ஏற்கிறாரா, இல்லையா என்பதை, பிப்ரவரி 16ம் தேதி தெரிவிக்குமாறு கூறி, விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
neelakantan s - mumbai,இந்தியா
30-டிச-201200:12:20 IST Report Abuse
neelakantan s இப்படியும் ஒரு நல்ல மனிதரை படைத்ததற்கு இறைவனை நாம் எல்லோரும் மனப்பூர்வமாக பிரார்த்திக்க வேண்டும் தேவேந்தர் பல்லாண்டு வாழ வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
parvathy murali - melbourne,ஆஸ்திரேலியா
29-டிச-201205:10:21 IST Report Abuse
parvathy murali இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் இருபதால் தான் தினமும் சூரியன் உதயம் ஆகிறார்,மழை பெய்கிறது,மலர் பூக்கிரது,நிலவு வருகிறது .உதவி செய்யாமல் இரத்த வெள்ளத்தில் ஒரு மனிதனை மனிதாபம் இல்லாமல் போன பெண்மணி இனி ஆவது பெண்ணின் இயல்பான கருணை தனை காக்க வேண்டுகிறேன் , ,
Rate this:
Share this comment
Cancel
bharatheee - nellai,இந்தியா
28-டிச-201214:03:39 IST Report Abuse
bharatheee நண்பர் தேவந்தர் அவர்களே நன்றி,காரணம் என்னை நீவீர் முந்தி சென்றதுக்கு. யாரவது அவரின் முகவரி தெரிந்தால் தெரியபடுத்தவும்
Rate this:
Share this comment
Cancel
Satheesh Kumar - joda,இந்தியா
27-டிச-201218:53:58 IST Report Abuse
Satheesh Kumar what Feb, the climate will changed at that time in between feb so many street people's suffer by cold and snow
Rate this:
Share this comment
Cancel
senthil - cbe,இந்தியா
27-டிச-201213:16:08 IST Report Abuse
senthil கருணை இருந்திருந்தால் அவரை ஏன் ரத்தவெள்ளத்தில் விட்டுவிட்டு சென்றார்? இவருக்கு தக்க தண்டனையும் கொடுக்க வேண்டும். வாழ்க தேவந்தர் போன்ற நல்ல உள்ளங்கள். இவர் போன்றோரால் தான் நாட்டில் மழை பெய்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
27-டிச-201212:22:45 IST Report Abuse
Mohamed Nawaz இது போன்ற செய்திகள் எல்லா ஊடகங்களிலும் வந்தால் உலகத்தில் மனித நேயம் வளர்ந்துவிடும். குப்தாவிற்கு பாராட்டுகள்
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
27-டிச-201211:10:07 IST Report Abuse
mirudan பெண்களில் ராட்சசிகள் இருக்கிறார் என புராணங்கள் கூறுகிறது.
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
27-டிச-201210:45:44 IST Report Abuse
anandhaprasadh இப்போ எல்லாம் பெண் விடுதலைக்குக் குரல் கொடுக்க வேண்டியது இல்லை... அதற்கான அவசியமும் இல்லை... ஆண் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வாழ வேண்டிய காலத்தில் இருக்கிறோம் நண்பர்களே... விழிப்போடு இருங்கள்...
Rate this:
Share this comment
Cancel
winnagar sitheek - Baghdad,ஈராக்
27-டிச-201210:14:10 IST Report Abuse
winnagar sitheek ருச்சி தயங்காமல் சம்மதித்து இருக்க வேண்டாமா , என்ன மாதிரி மனிதர்கள் அய்யா தேவேந்தர் போல் நல்ல மனங்கள் உள்ளதால் தான் மழை பெய்கிறது
Rate this:
Share this comment
Cancel
balaji - Pune,இந்தியா
27-டிச-201209:47:38 IST Report Abuse
balaji தெய்வத்தை காண்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை