திருவாடானை:திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே கிணற்றில் கிடந்த துப்பாக்கி, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி போலீஸ் ஸ்டேஷனில் மாயமானதா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி போலீஸ் ஸ்டேஷனில், டிச., 8ம் தேதி, துப்பாக்கிகளை ஆய்வு செய்த போது, ஒரு பிஸ்டல், 30 தோட்டாக்கள் மாயமானது தெரிந்தது. எஸ்.ஐ., ஜெயக்குமார், பாதுகாப்பு பணிக்காக ஸ்டேஷனில் இருந்து வாங்கிய துப்பாக்கி, 30 தோட்டாக்களை ஸ்டேஷனில் ஒப்படைத்தாக கூறினார். ஆனால், "ஒப்படைக்கவில்லை' என, சிறப்பு எஸ்.ஐ., பாலையன் கூறினார். இதனால் இருவரும், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சம்பவம் நடந்து, 20 நாட்கள் ஆகியும், துப்பாக்கி, தோட்டாக்கள் குறித்து எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே, சிலாங்குளம் கிராமத்தில் உள்ள கிணற்றை தூர்வாரிய போது, ஒரு பிஸ்டல். நான்கு தோட்டாக்கள் கிடைத்தன.
தொண்டி போலீசார், அங்குள்ள போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, துப்பாக்கியின் எண் மற்றும் தோட்டாக்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.