சிவகங்கை: பசுமை வீடுகள் பயனாளிகள் தேர்வில் முறைகேடு இருந்தால், அது குறித்து அறிக்கை வழங்க, கலெக்டர்களுக்கு, ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஆண்டுதோறும், ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு, பசுமை வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை முதல்வர் ஜெ., அறிமுகம் செய்தார். இதில்,சோலார் மின்விளக்கு வசதியுடன் வீடுகள் கட்டித்தரப்படும். இதற்காக, ஊரக வளர்ச்சித்துறை மூலம், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் தேர்வான பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படுகிறது. கடந்த, 2011-12 ம் ஆண்டு கட்டிமுடித்த, பசுமை வீடுகள் முன், பயனாளிகள் குடும்பத்தாரை நிறுத்தி,போட்டோக்கள் எடுத்து, அவற்றை, அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மூலம், முதல்வர் பார்வைக்கு அனுப்ப அரசு உத்தரவிட்டது. ஆனால், பல மாவட்டங்களில், பசுமை வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. கட்டி முடித்ததாக காட்ட, சில அதிகாரிகள், பிற மாவட்டங்களில் கட்டி முடித்த வீடுகள், பயனாளிகள் போட்டோக்களை வாங்கி, சம்பந்தப்பட்ட பயனாளிகள் போல், முறைகேடாக பட்டியல் தயாரித்து அனுப்பினர்.
இது குறித்த விஷயம், அரசுக்கு தெரிய வந்துள்ளது.இதனால், கட்டி முடித்த பசுமை வீடுகளில், தேர்வான பயனாளிகள் தான் வசிக்கிறார்களா,வேறு யாரும் இருக்கிறார்களா. கடந்த ஆண்டு, கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், அதில் வசிக்கும் பயனாளிகள் குறித்த விபரங்களை, பிற மாவட்டங்களில் வாங்கி, அனுப்பிய பொறியாளர்கள் விபரங்களை சேகரித்து அனுப்பும்படி, அந்தந்த கலெக்டர்களுக்கு, ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.