Daughter donates his mother eyes | தானம் செய்ய மனமிருக்கு அடக்கம் செய்ய பணமில்லை: கண்ணீரில் கரைந்த மகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தானம் செய்ய மனமிருக்கு அடக்கம் செய்ய பணமில்லை: கண்ணீரில் கரைந்த மகள்

Added : டிச 27, 2012 | கருத்துகள் (32)
Advertisement
 தானம் செய்ய மனமிருக்கு அடக்கம் செய்ய பணமில்லை: கண்ணீரில் கரைந்த மகள்

கோவை :தாயின் உடலை அடக்கம் செய்யக்கூட பணமில்லாத நிலையிலும், கண்தானம் செய்ய முன்வந்த மகளின் மனிதநேயத்தை பலரும் பாராட்டினர்.

திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா, 47. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கணவன் பிரிந்து விட்டார். இதனால் சுயமாக வாழ்வை நடத்திட பனியன் தொழிலை தேர்ந்தெடுத்தார். இத்தொழிலின் மூலம் வரும் வருமானத்தை கொண்டு நாட்களை நகர்த்தி வந்தார்.வறுமையால் பள்ளி படிப்போடு, மகள் ரமணியை பனியன் தொழிலுக்கே அழைத்து சென்றார். நிலைமையை உணர்ந்த மகளும், தாய்க்கு உறுதுணையாக இருந்து வந்தார். ரமணியின் மனதில் கல்வி மீதான ஆர்வம் குறையாமல் இருந்தது. இதனால், தொலைதூர கல்வியில் பி.காம்.,(சி.ஏ) படித்து வந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு ஆறுதலாக இருந்து வந்தனர்.

அமைதியாக சென்று கொண்டியிருந்த இவர்களது வாழ்வில், நோய் வடிவில் புயல் வீசியது. கடந்த 6ம் தேதி, சகுந்தலாவுக்கு வயிற்றில் கடும் வலி ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனையில் சகுந்தலாவின் வயிற்றில் நீர்கோர்த்து கிருமிகள் தொற்றியுள்ளது தெரியவந்தது. இதனால், மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இறுதியில் சிகிச்சை பலனின்றி, சகுந்தலாவின் உயிரை காலம் பறித்து கொண்டது. தாய் இழந்த துக்கத்தில், மகள் ரமணியும் செய்தவறியாது நின்றார். தாயின் உடலை அடக்கம் செய்யக் கூட கையில் பணம் இல்லாத நிலையில் ரமணி இருந்தார். இவருடைய சூழ்நிலையை உணர்ந்து, கோவையிலுள்ள தனியார் அமைப்பு ஒன்று உதவ முன்வந்தது.

இந்நிலையில் "அம்மாவின் ஆசை' ஒன்று, ரமணியின் மனதில் உதித்தது. தாய் சகுந்தலாவின் கண்களை எடுத்து, பிறருக்கு பார்வை அளிக்க வேண்டும் எனும் விண்ணப்பபம்தான் அது. வாழ்க்கையில் யாரும் அடுத்து துணைக்கு இல்லாத நிலையிலும், தாய் இறந்த சோகம் கண்முன் இருந்தும், பிறரின் வாழ்வில் வெளிச்சம் கொடுக்க வேண்டும் எனும் ரமணியின் மனிதநேயத்தை, மருத்துவமனையில் இருந்த அனைவரும் பாராட்டினர். இறுதியில் பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக, கண்தானம் செய்யமுடியாமல் போனது மிகுந்த வருத்தத்தை அளித்தது.

அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சிவப்பிரகாசம் கூறியதாவது:சிறிய பெண்ணின் எண்ணம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இறந்த பெண்ணை விட்டு கணவர் சென்றதால், நாளை அவர் பிரச்னை செய்ய வாய்ப்புள்ளது. சட்டச் சிக்கல்கள் உள்ளதால் கண்தானம் பெற இயலாத நிலையில் உள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
30-டிச-201206:44:07 IST Report Abuse
Matt P இருபது வருடம் என்பது நீண்ட காலம்.....ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு அவர் மனைவியோடு சமாதானமாக பேசி மீண்டும் வாழ்க்கை நடத்தாவிட்டால் அவர்கள் கணவன் மனைவிக்கான அந்தஸ்தை இழகிரார்கள் என்று தான் சட்டம் இருக்க வேண்டும்....நாட்டுக்கு நாடு சட்டம் வித்யாசபட்டாலும் சட்டம் என்பது மக்களுடைய வசதிக்காகவும் பாதுகாப்புஇகாகவும் ஏற்படுதபடுகிற ஓன்று
Rate this:
Share this comment
Cancel
mkr - cni,இந்தியா
29-டிச-201218:10:30 IST Report Abuse
mkr என்னய்யா சட்டம்? விட்டு விட்டு போன அந்த நாய்க்காக அந்த மாணவி ஆசைப்பட்டதுகூட நடக்க முடியவில்லை என்றால், அவன் திரும்ப வந்து மகளை காப்பாத்தவா போகிறான்... இறந்த அந்த தாயின் ஆத்மா சாந்தி அடையவும், அந்த சகோதரி நல்ல நிலமிக்கு வரவும் கடவுளை பிரார்த்திப்போம்...
Rate this:
Share this comment
Cancel
S.SELVARAJ - Portland,யூ.எஸ்.ஏ
28-டிச-201221:58:54 IST Report Abuse
S.SELVARAJ I will help her to finish her studies or until she finds a right job. Contact ID: selvaraji@msn.com. Ph: 248 252 8001 (USA). S.Selvaraj.
Rate this:
Share this comment
praveen kumar - thanjavur,இந்தியா
04-ஜன-201309:58:39 IST Report Abuse
praveen kumarயு ஆர் ரியலி கிரேட் யா ...
Rate this:
Share this comment
Cancel
chandrakumar - TRUNELVELLI,இந்தியா
28-டிச-201218:43:46 IST Report Abuse
chandrakumar மனித நேயத்தை மதிக்கும் சட்டம் வர வேண்டும். அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய பிர்ரார்த்திக்கிரேன். உங்களின் மனிதம் உங்களை மேன்மை அடைய செய்யும். தன்னம்பிக்கையோடு வாழ்வை வெல்க.
Rate this:
Share this comment
Cancel
Tamilvanan - bangalore,இந்தியா
28-டிச-201216:54:28 IST Report Abuse
Tamilvanan அம்மாவின் மறைவுக்கு எனது அழ்ந்த அனுதாபங்கள்.உன்னுடைய வாழ்க்கை சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள் தமிழ்வாணன் பெங்களூர்
Rate this:
Share this comment
Cancel
Suresh, Muscat - Nimr,ஓமன்
27-டிச-201217:51:39 IST Report Abuse
Suresh, Muscat அனுதாபங்கள் சகோதரி.., உன் செயல் எல்லோரையும் பெருமைப்பட வைக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
vijikummar - coimbatore,இந்தியா
27-டிச-201215:21:46 IST Report Abuse
vijikummar வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
Rathina Kumar - Rajapalayam,இந்தியா
27-டிச-201210:42:04 IST Report Abuse
Rathina Kumar மனித நேயத்தை மதிக்கும் சட்டம் வர வேண்டும். அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய பிர்ரார்த்திக்கிரேன். உங்களின் மனிதம் உங்களை மேன்மை அடைய செய்யும். தன்னம்பிக்கையோடு வாழ்வை வெல்க.
Rate this:
Share this comment
Cancel
idhaya - tirupur  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-201210:01:42 IST Report Abuse
idhaya nallathukallam sattam paarkum naadu....?
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
27-டிச-201209:54:06 IST Report Abuse
p.manimaran என் கண்ணில் கண்ணீர் வருகிறது. எல்லோரும் உதவி செய்வோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை