தேனி: பதினாறு வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய, வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி, வீரபாண்டி அருகே உள்ள தாடிச்சேரியை சேர்ந்தவர் ஷாலினி,16 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவரை பிரிந்த ஷாலினியின் தாய், கூலி வேலை செய்து வந்தார். எட்டாம் வகுப்பு படித்து விட்டு, வீட்டில் இருந்த ஷாலினிக்கு வயிறு பெரிதாகி வந்தது. சந்தேகமடைந்த தாய், டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்த போது, ஷாலினி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தாடிச்சேரி தெற்கு தெருவை சேர்ந்த சங்கிலி, 28, தன்னை கட்டாயப்படுத்தி கற்பழித்ததாக, போலீசாரிடம் ஷாலினி தெரிவித்தார்.
ஏற்கனவே திருமணம் ஆன சங்கிலிக்கு, ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.அவரை வீரபாண்டி போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.