மயிலம்: மயிலம் அருகே வாலிபரை காரில் கடத்திச் சென்று கொலை செய்த மர்ம கும்பலைத் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் வசிப்பவர் செல்வராஜ், 53; கிராம உதவியாளர். இவரது மகன் ரமேஷ். கறிவேப்பிலை வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு, ரமேஷின் வீட்டிற்கு பைக்கில் வந்த இரண்டு பேர், "உன் தம்பி திருமலை எங்கே' என ரமேஷிடம் விசாரித்தனர். அப்போது 5 பேருடன் இண்டிகா காரில் வந்த கும்பல், ரமேஷை கடத்திச் சென்றது.
ஆத்திரமடைந்த ரமேஷின் உறவினர்கள், மறியல் செய்ய முயன்றனர். மயிலம் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். செல்வராஜ் புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர். வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணப்பன் நேற்று முன்தினம் மாலை மயிலம் வந்து, கடத்தல் சம்பவம் குறித்து விசாரித்து விட்டுச் சென்றார். இதற்கிடையே காரில் கடத்திச் சென்ற ரமேஷை, மர்ம கும்பல் திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அருகே உள்ள பூதமங்கலம் காட்டுப் பகுதியில் கொலை செய்து, வீசிவிட்டுச் சென்றிருந்தது. மங்கலம் போலீசார் ரமேஷின் பிரேதத்தை கைப்பற்றி, திருவண்ணாலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அங்கு பிரேதப் பரிசோதனை முடிந்து, ரமேஷின் உடல் கூட்டேரிப்பட்டிற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.