ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான, "லேப் டாப்' வழங்கும் விழா நேற்று நடக்க இருந்தது. மூன்றாம் ஆண்டு மாணவர்களின் போராட்டத்தால், விழா ஒத்தி வைக்கப்பட்டது.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 397 பேருக்கு, தமிழக அரசின் இலவச லேப் டாப் வழங்கும் விழா, நேற்று மதியம் நடக்க இருந்தது. மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, லேப் டாப் கிடைக்காததால், அவர்கள் நேற்று காலை 10 மணிக்கு, ஊர்வலமாக தாலுகா அலுவலகம் சென்று, சிறிது நேரம் கோஷமிட்டனர்.
பின், காந்திசிலைக்கு புறப்பட்டனர். பணியில் இருந்த எஸ்.ஐ., மற்றும் ஏட்டு தடுத்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. பின், ஊர்வலமாக வந்த மாணவர்கள், "அரசு பிரசவ மருத்துவமனை எதிரே ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் பின், மீண்டும் ஊர்வலமாக தாலுகா அலுவலகம் சென்று, ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.
தாசில்தார் தனலட்சுமி, டி.எஸ்.பி., அசோகன் சமரசம் முயற்சியில் ஈடுபட்டனர். மதியம் ஒரு மணிவரை போராட்டம் நீடித்தது. கல்லூரி துணை முதல்வர் ரவிசந்திரன் மாணவர்களிடையே பேசுகையில், ""மாணவர்களை ஒதுக்கும் எண்ணம், அரசுக்கு கிடையாது. கல்வியின் தரம் உயரவே, லேப் டாப் வழங்கப்படுகிறது. தற்போது பிரச்னை ஏற்பட்டதால், விழா ஒத்தி வைக்கப்படுகிறது. மூன்றாம் ஆண்டு மாணவர்களின் பட்டியலை அரசு கேட்டுள்ளது. பிப்ரவரியில் உங்களுக்கும் லேப் டாப் கிடைக்கும்,'' என்றார். அதன்பின், மாணவர்கள் தங்களது கோரிக்கையை, மனுவாக தாசில்தாரிடம் கொடுக்க, மதியம் 1.30 மணிக்கு கலைந்து சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.