தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, லோடுவேன் மீது, பைக் மோதிய விபத்தில், இருவர் பலியாயினர்.
தூத்துக்குடி, செய்துங்கநல்லூர், ஆச்சிமடம், பேச்சிமுத்து மகன் லட்சுமணன்,23, அதேஊர் சுந்தர்,22, வெட்டிகுளம்
கந்தன் மகன் ஆனந்தராஜ்,22, ஆகிய மூவர், நேற்றுமுன்தினம் மாலை, ஒரே பைக்கில், தலைக்கவசம் அணியாமல்,
செய்துங்கநல்லூரிலிருந்து, ஆச்சிமடம் நோக்கி சென்றனர். வழியில், முன்னால் சென்ற லோடுவேனை முந்திச்செல்ல முயன்றபோது, எதிரே, மற்றொரு வாகனம் வந்ததால், நிலைதடுமாறிய பைக், லோடு வேன் பின்புறம் மோதியது. இதில், மூவரும், படுகாயமடைந்தனர். ஆனந்தராஜ், சிறிது நேரத்தில் இறந்தார். நெல்லை ஹகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரியில், சிகிச்சைபெற்ற சுந்தர், நேற்று இறந்தார். லட்சுமணன், தொடர் சிகிச்சை பெற்றுவருகிறார். செய்துங்கநல்லூர் போலீசார் விசாரித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.