திருவாரூர்: பேரளம் ரயில்வே தண்டவாளத்தில் கை, கால்கள் துண்டான நிலையில் கிடந்த இளம் பெண் சடலத்தை போலீசார் கைப் பற்றி விசாரித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகில் ரயில்வே தண்டவாளத்தில் உடல் மற்றும் கை, கால்கள் துண்டான நிலையில் இளம் பெண் சடலம் கிடந்து. வி.ஏ.ஓ., கொடுத்த புகாரின் பேரில் பேரளம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். இறந்து கிடந்தவர், நாகை மாவட்டம், புத்தாகரம் காளியம்மன்கோவில்தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகள் விமலா 24; என்பது தெரிந்தது. மேலும் விசாரனையில் சந்திரசேகர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மனைவி கலைச்செல்வி மற்றும் இரு பெண் குழந்தைகளை விட்டு தலைமறைவானார். கலைச்செல்வி கூலிவேலை செய்து இரு மகள்களையும் வளர்த்து, முதல் மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இளைய மகளான விமலா 24; நர்சிங் முடித்து, திருவாரூரில் தனியார் மருத்துவ மனையில் வேலை செய்தார். அவருக்கு திருவாரூர் அருகில் உள்ள காட்டூரில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். திருமணம் தொடர்பாக விமலா மறுப்பு கூறாமல் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். ஆனால் விமலா எப்படி இறந்தார். யாராவது கொலை செய்து ரயில் நிலையத்தில் வீசிச்சென்றனரா அல்லது மாப்பிள்ளை பிடிக்காமல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.