மதுரை: மதுரை சிறையில், நேற்றும்(டிச.,26) ஒரு கைதி இறந்ததையடுத்து, மருத்துவ வசதி கேட்டு மற்ற கைதிகள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். மதுரை கரும்பாலை சோணைமுருகன், 24. பெண் கடத்தல் வழக்கில், அண்ணாநகர் போலீசாரால் டிச.,14ல், சிறையில் அடைக்கப்பட்டார். டிச.,23 இரவு மாரடைப்பால் இறந்தார். இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி, இரு நாட்களாக அவரது உடலை பெற உறவினர்கள் மறுக்கின்றனர். சிறை மருத்துவமனையில், அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக்கூறி, நேற்றுமுன்தினம் காலை முதல், நக்சைலட் அமைப்பைச் சேர்ந்த விவேக் மற்றும் சுதர்சன் உட்பட 50 கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்நிலையில் நேற்றுகாலை மதுரை திடீர்நகர் ஆயுள் கைதி பாண்டி, 56, உடல்நலக் குறைவால் இறந்தார். சிறை மருத்துவமனையில், இ.சி.ஜி., எக்ஸ்ரே போன்ற பரிசோதனை கருவிகள் வழங்கப்பட வேண்டும் எனக்கூறி, விவேக், சுதர்சன் மட்டும் தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.