சென்னை: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பாகிஸ்தான் உளவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ள தமீம் அன்சாரி, சென்னையில் உள்ள, அறிவுரை குழுமம் முன், நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். தஞ்சை மாவட்டம், அதிராம் பட்டினம், ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி, 36. இப்பகுதி புதிய பேருந்து நிலையம் அருகே, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் வெங்காய வியாபாரம் செய்வதாகக் கூறி, அடிக்கடி விமானம் மூலம் இலங்கை சென்று வந்தார். கியூ பிரிவு போலீசாருக்கு, இவர் மீது சந்தேகம் ஏற்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினர். தென் மாநிலங்களில் உள்ள ராணுவ மையங்கள் மற்றும் துறைமுகங்களை படம் பிடித்து, இலங்கையில் செயல்படும், பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு, இ-மெயில் அனுப்பியதாக, இந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், தமீம் அன்சாரியை, கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். பின், திருச்சி, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்த கியூ பிரிவு போலீசார், அவர் தங்கியிருந்த வீடு மற்றும் ராணுவ தளங்களை படம் எடுத்த இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்நிலையில், தமீம் அன்சாரியின், ஐ.எஸ்.ஐ., தொடர்புகள் குறித்து முக்கிய, "சிடி' போலீசாரிடம் சிக்கியது. போலீஸ் காவல் முடிந்ததும், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த படியே, வீடியோ கான்பரஸ் மூலம், அவ்வப்போது, கோர்ட் காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இம்மாதம், 5ம் தேதி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தமீம் அன்சாரி, கைது செய்யப்பட்டார்.
தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒருவரை கைது செய்தால், சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள, அறிவுரை குழுமம் முன், அவரை ஆஜர்படுத்த வேண்டும். அறிவுரை குழுமத்தில், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதிகள், உறுப்பினர்களாக இருப்பர். அறிவுரை குழுமத்தின் விசாரணைக்குப் பின், அவரை கைது செய்தது சரி என்றால், அரசின் உத்தரவை உறுதி செய்தும், சரியில்லை என்றால், ரத்து செய்தும், உத்தரவிடப்படும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட தமீம் அன்சாரியை, திருச்சி கியூ பிரிவு போலீசார், சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, அறிவுரை குழுமம் முன், நேற்று ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து, மீண்டும் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.