பரங்கிமலை : "தினமலர்' செய்தி எதிரொலியாக பரங்கிமலை ரயில் நிலைய நடைபாதையில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. பரங்கிமலை ரயில் நிலையத்தில், சுரங்கப்பாதை பகுதி மற்றும் பரங்கிமலை - மேடவாக்கம் சாலை பகுதி என, இரண்டு இடங்களில் பயணச்சீட்டு மையங்கள் உள்ளன. இதில், பரங்கிமலை - மேடவாக்கம் சாலை பகுதியில் உள்ள மையம், நடைபாதை கடைகள், வாகன பாதுகாப்பு மையம் என, நெருக்கடியான பகுதியில் உள்ளது. இதனால், சாலையில் இருந்து ரயில் நிலையம் செல்ல பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, சாலையில் இருந்து ரயில் நிலையம் செல்லும் பாதையில், ரயில்வே நிர்வாகம் தடுப்பு சுவர் கட்டி உள்ளது. இதன் மூலம், இருசக்கர வாகனங்கள் மற்றும் நடைபாதை கடைகள் தொந்தரவு இல்லாமல், பயணிகள் சிரமமின்றி ரயில் நிலையம் செல்ல முடியும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.