சென்னை: உளவுப் பிரிவு, முன்னாள் அதிகாரி, ஜாபர் சேட் மீது, வழக்குத் தொடர அனுமதி கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை, மதுரவாயலைச் சேர்ந்த, சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனு: உளவுப் பிரிவில், கூடுதல் டி.ஜி.பி.,யாக பணியாற்றிய, ஜாபர் சேட் மீது, தலைமைச் செயலரிடம், புகார் அளித்தேன். வீட்டு வசதி வாரியத்தில் இருந்து, சட்டவிரோதமாக, வீட்டுமனை பெற்றதாக, புகாரில் கூறியிருந்தேன். அதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பின், ஜாபர் சேட் மீது வழக்குத் தொடர, ஒப்புதல் அளிக்குமாறு, மாநில உள்துறை மூலம், லஞ்ச ஒழிப்புத் துறை கோரியது. இதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. ஒரு வழக்கில், "சட்டப்பூர்வமாக வழக்குத் தொடர, மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும். அட்டர்ஜி ஜெனரல் அல்லது அந்த அலுவலக அரசு வழக்கறிஞரிடம், ஆலோசனை பெற வேண்டியது இருந்தால், கூடுதலாக ஒரு மாதம் எடுத்துக் கொள்ளலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மூன்று மாதங்களுக்குள், மத்திய உள்துறை அமைச்சகம், ஒப்புதல் அளிக்கவில்லை. இது, சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறுவதாக உள்ளது. எனவே, ஐ.பி.எஸ்., அதிகாரி ஜாபர் சேட் மீது, வழக்குத் தொடர அனுமதியளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது. மனுவை, நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, நீதிபதி ஒத்திவைத்து உள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.