விழுப்புரம்: செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட, ஏழு பேருக்கு, நிபந்தனை ஜாமின் தளர்வு செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி நடத்தியதில், 28.37 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, குவாரி மேலாளர் உட்பட ஏழு பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அனைவரும் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டு, தனித்தனி கோர்ட்டுகளில், காலை, மாலை கையெழுத்திட்டனர். நிபந்தனை ஜாமினை தளர்வு செய்யக் கோரி, பொன்முடி உள்ளிட்ட, ஏழு பேரும் விழுப்புரம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில், மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது, நேற்று விசாரணை நடந்ததுற. இதில், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட, ஏழு பேருக்கும், நிபந்தனை ஜாமினை தளர்வு செய்தும், சம்மன் அனுப்பினால் கோர்ட்டில் மீண்டும் ஆஜராக வேண்டும் என, நீதிபதி, திருநீல பிரசாத் உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.