சென்னை: சென்னை, வடபழனி கோவிலுக்கு வரும், வாகனங்களை நிறுத்துவதற்கு, கட்டணம் வசூலிக்க, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்த, கே.வேலு என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:
வடபழனி கோவில் அருகில் உள்ள, திருமண மண்டபத்தில், மேலாளராக பணியாற்றுகிறேன். கோவிலுக்கு வாகனங்களில் வருபவர்களிடம், "பார்க்கிங்' கட்டணம், வசூலிக்கப்படாமல் இருந்தது. கடந்த செப்டம்பர் முதல், சுந்தரபாண்டியன் என்பவர், பார்க்கிங் கட்டணம் வசூலித்து வருகிறார். இதற்கான, டெண்டர் கோரப்படவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி, கோவில் நிர்வாக அதிகாரிக்கு, மனு அனுப்பினேன். அவர் அனுப்பிய பதிலில், "டெண்டர், அறிவிப்பாணையில் வெளியிடப்படவில்லை. 2 லட்சம் ரூபாய், குறைந்தபட்ச தொகை என, நிர்ணயிக்கப்பட்டது; சுந்தரபாண்டியன், 2.09 லட்சத்துக்கு எடுத்துள்ளார்' என, கூறப்பட்டுள்ளது. ஏலத்தில், மூன்று பேர் கலந்து கொண்டதாக, கூறப்பட்டுள்ளது. ஒரே முகவரியில் வசிக்கும், விஜயகுமார், வினோத்குமார், தந்தையும், மகனும் ஆவர். இவர்கள், ஏலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஏலம் எடுத்த சுந்தரபாண்டியன், விஜயகுமாரின் ஊழியர். ஏலத்தின் போது, தவறான முகவரியை அளித்துள்ளனர். உரிமம் பெறுவதற்காக, சுந்தரபாண்டியன், மோசடி செய்துள்ளார். இதுகுறித்து, அரசுக்கு மனுக்கள் அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. பார்க்கிங் கட்டணம் வசூலிக்க, சுந்தரபாண்டியனுக்கு வழங்கிய உரிமத்தை, ரத்து செய்ய வேண்டும். புதிதாக, ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை, உரிமம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: இம்மனு, இம்மாதம், 3ம் தேதி விசாரணைக்கு வந்த போது, 17ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, சுந்தரபாண்டியனுக்கு தனிப்பட்ட முறையில், "நோட்டீஸ்' வழங்க உத்தரவிடப்பட்டது. வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீசை, பெற, அவர் மறுத்துள்ளார். எனவே, இரண்டு வாரங்களுக்கு, தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.