திருநெல்வேலி: தாய், தந்தை, இரண்டு மகள்கள் என, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு பேர், வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவரை, சாகும் வரை தூக்கில் போட, கோர்ட் உத்தரவிட்டது. திருநெல்வேலி, பேட்டையை சேர்ந்தவர் ஜெயகுமார், 40. இவர், களக்காடு அருகே மீனவன்குளத்தில், ஒரு தோட்டத்தில் மனைவி சண்முகத்தாய், 37, மகள்கள், இந்திரா, 10, சித்ரா, 8,வுடன் வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா, 32. இவர், தன் மனைவிக்கும், ஜெயகுமாருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு, ஜெயகுமாரை கண்டித்துள்ளார். அந்த விரோதத்தில், 2007, ஏப்.,19 மாலை, 6:30 மணியளவில், காட்டு ராஜாவும், அவரது உறவினர் வெட்டும்பெருமாளும், ஜெயகுமார் தோட்டத்திற்கு சென்றனர். சைக்கிளில் வீடு அருகே சென்று கொண்டிருந்த ஜெயகுமாரையும், வீட்டின் முன் நின்று கொண்டிருந்த, அவர் மனைவி சண்முகத் தாயையும் வெட்டிக் கொன்றனர். பெற்றோர் கொலை செய்யப்படுவதை, பீதியுடன் பார்த்த சிறுமிகள் இருவரும், வீட்டுக்குள் சென்று, கதவை தாழிட்டுக் கொண்டனர். கொலையாளிகள் இருவரும், ஜெயகுமாரின் வீட்டுக் கதவை கடப்பாரையால் உடைத்து, உள்ளே புகுந்து, சிறுமிகளையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். மறுநாள் காலை, தோட்ட வேலைக்கு சென்ற பெண்கள் பார்த்த பிறகு தான், நான்கு பேர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. களக்காடு போலீசார் விசாரித்தனர். நெல்லை இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி நந்தகுமார், இவ்வழக்கை விசாரித்து, கொலையாளிகள் இருவரையும் நான்கு முறை, சாகும் வரை, தூக்கில் போடுமாறு உத்தரவிட்டார்.
இறந்தவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், வீடு புகுந்து சிறுமிகளை கொலை செய்ததாலும், கொலையாளிகளுக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், தலா, 2.25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். அரசு தரப்பில், வக்கீல் ராஜ கிருபாகரன் ஆஜரானார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.